கவனக்குறைவாக கார் ஓட்டியவர் மீது குற்றச்சாட்டு

1 mins read
c0e11578-cdf5-4cdc-9910-d4e9d57f7f4c
பேருந்தில் இருந்த 68 வயது சியா கியோக் தியாங்கிற்கு விலா எலும்பில் முறிவும் தலையில் காயமும் ஏற்பட்டது.  - படம்: சமூக ஊடகம்

கவனக்குறைவாக கார் ஓட்டி பொது பேருந்தில் சென்றவருக்கு கடுமையான காயம் விளைவித்த சந்தேகத்தின் அடிப்படையில் ஆண்ட்ரூ ஃபாத்திபா என்பவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு செப்டம்பர் 8 அன்று ஆண்ட்ரூ தமது காரில் நார்த் பிரிட்ஜ் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென இடது பக்கம் உள்ள லியாங் சியா ஸ்ட்ரீட்டில் நுழைந்தார்.

கார் மீது மோதி விடக்கூடாது என்பதற்காக 175 எண் கொண்ட பேருந்தை ஓட்டிவந்த ஓட்டுநர் வேகத்தை குறைக்கும் விசையை (பிரேக்) முன்னெச்சரிக்கையின்றி உடனே அழுத்தினார். அப்போது பேருந்தில் இருந்த சியா கியோக் தியாங் என்னும் பயணிக்கு விலா எலும்பில் முறிவும் தலையில் காயமும் ஏற்பட்டது.

அதன் பின்னர் 68 வயது சியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். செப்டம்பர் 16ஆம் தேதி இதய நோய், பல உறுப்புகள் செயல் இழந்த காரணத்தால் அவர் மாண்டார்.

அதைத்தொடர்ந்து ஆண்ட்ரூ மீது புதன்கிழமை குற்றஞ்சாட்டப்பட்டது. வழக்கு விசாரணை மார்ச் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கவனக்குறைவாக வாகன ஓட்டி மற்றவர்களுக்கு கடுமையான காயங்களை ஏற்படுத்தும் குற்றத்திற்கு 2 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை 5,000 வெள்ளி வரையிலான அபராதம் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்