வீவக கீழுள்ள காப்பி கடைகளின் வாடகை உயர்த்தப்படவில்லை

வீவக கீழுள்ள காப்பி கடைகளின் வாடகை உயர்த்தப்படவில்லை

1 mins read
b310d018-5ea5-42c4-bb32-1ffdc8c623ac
சிங்கப்பூரில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் கீழ் 374 காப்பி கடைகள் உள்ளன, தனியார் நிர்வாகத்தின் கீழ் 402 காப்பி கடைகள் உள்ளன.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

கடந்த ஐந்து ஆண்டுகளில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் கீழ் உள்ள 97 விழுக்காடு காப்பி கடைகளின் வாடைகள் உயர்த்தப்படவில்லை என்று தேசிய வளர்ச்சிக்கான மூத்த துணையமைச்சர் சிம் ஆன் புதன்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

காப்பி கடைகளில் விற்கப்படும் உணவுகளின் விலையை கட்டுக்குள் வைக்க கடை உரிமையாளர்களுக்கு உதவிகள் வழங்கப்படுகிறதா என்று நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு திருவாட்டி சிம் ஆன் பதிலளித்தார்.

வீவக கீழ் 374 காப்பி கடைகள் உள்ளன, தனியார் நிர்வாகத்தின் கீழ் 402 காப்பி கடைகள் உள்ளன. தனியார் நிர்வாகங்களும் சந்தை நிலவரத்தை மதித்து வாடகையை ஒழுங்கு முறைப்படித்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

அதிகரித்து வரும் விலை சூழலை சமாளிக்க கடந்த ஐந்து ஆண்டுகளில் வீவக கீழ் உள்ள காப்பி கடைகளின் வாடகை புதுப்பித்தலை 1.6 விழுக்காட்டுக்குள் வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

1998 ஆம் ஆண்டுக்குப் பிறகு வீவக காப்பி கடைகளை விற்பதில்லை. அதற்கு பதிலாக அவற்றை வாடகைக்கு மட்டும் தான் வீவக அனுமதிக்கிறது.

குறிப்புச் சொற்கள்