செப்பாங் பந்தய தடத்தை நோக்கிப் படையெடுக்கும் சிங்கப்பூர் வாகனங்கள்

செப்பாங் பந்தய தடத்தை நோக்கிப் படையெடுக்கும் சிங்கப்பூர் வாகனங்கள்

2 mins read
315d2049-5d48-468a-8858-1b36966ee324
5.5 கிலோ மீட்டர் பந்தய தூரம் கொண்ட செப்பாங் அனைத்துலக பந்தய தடத்தில் உலகப் புகழ்பெற்ற எஃப்1 கார் பந்தயங்களும் இடம்பெற்றுள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

மலேசியாவின் செப்பாங் அனைத்துலக பந்தய தடத்தில் தங்களது கார்களையும் மோட்டார் சைக்கிள்களையும் ஓட்ட பல சிங்கப்பூரர்கள் விரும்பி வருகின்றனர்.

சிங்கப்பூரில் இருந்து கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் சாலை வழி பயணம் செய்து செப்பாங் பந்தய தடத்திற்கு மக்கள் செல்கின்றனர்.

மோட்டார் சைக்கிள் மற்றும் வாகன குழுக்கள் மூலமாகப் பந்தய திடலில் வாகனங்களை ஓட்ட முன்பதிவுகள் செய்யப்படுகின்றன.

நான்கு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை பந்தய திடலை முன்பதிவு செய்து வாகனமோட்டிகள் தங்கள் பந்தய ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள வாய்ப்புகள் தரப்படுகின்றன.

பந்தய திடலுக்கான முன்பதிவுகள் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அதிகரித்து வருவதாக பந்தயங்களை ஏற்பாடு செய்யும் குழுக்கள் தெரிவித்துள்ளன.

ஒரு மாதத்தில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நாள்கள் சிங்கப்பூர் குழுக்களால் செப்பாங் பந்தய திடல் முன்பதிவு செய்யப்படுவதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்தது.

2020ஆம் ஆண்டுக்கு முன்னர் அத்திடலை மாதம் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே சிங்கப்பூர் குழுக்கள் முன்பதிவு செய்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

பந்தய திடலில் வாகனங்கள் ஓட்ட 300 வெள்ளி முதல் 800 வெள்ளி வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

5.5 கிலோ மீட்டர் பந்தய தூரம் கொண்ட செப்பாங் அனைத்துலக பந்தய தடத்தில் உலகப் புகழ்பெற்ற எஃப்1 கார் பந்தயங்களும் இடம்பெற்றுள்ளன. 1999ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை செப்பாங் பந்தய தடத்தில் எஃப்1 கார் பந்தயங்கள் நடந்தன.

குறிப்புச் சொற்கள்