குழந்தையை பல முறை தாக்கியதாக முன்னாள் பாலர் பள்ளி ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

குழந்தையை பல முறை தாக்கியதாக முன்னாள் பாலர் பள்ளி ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

1 mins read
531fc5b4-3dfa-4ec2-9921-66062c5e7fa4
படம்: - தமிழ் முரசு
Google News Preferred Icon

ஒரு வயது குழந்தையைப் பலமுறைத் தாக்கியதாக 40 வயது பெண் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அந்தத் தாக்குதலால் சிறுமியின் சருமத்திற்குக்கீழ் ரத்தக்கசிவு ஏற்படுத்தும் எக்சிமோசிஸ் பிரச்சினை ஏற்பட்டது.

மார்ச் 15ஆம் தேதி பாலர் பள்ளி ஒன்றில் மாலை 5.00 மணியளவில் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

குழந்தைப் பராமரிப்பாளராகப் பணியாற்றிய அவரது கண்காணிப்பின்கீழ் அந்தக் குழந்தையும் பராமரிக்கப்பட்டு வந்தது.

குழந்தையின் பாதுகாப்பை முன்னிட்டு நீதிமன்ற ஆவணங்களில் பெண்ணின் விவரங்கள் மறைக்கப்பட்டிருந்தன.

டிசம்பர் 8ஆம் தேதி அன்று குழந்தையைத் துன்புறுத்தியதாக அவர் மீது ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

குழந்தையின் விவரங்களும் வெளியிடப்படவில்லை.

நீதிமன்றத்தில் பேசிய பெண், தன்னைப் பிரதிநிதிக்க வழக்கறிஞரை அமர்த்தவில்லை என்றும் குற்றத்தை ஒப்புக்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு ஜனவரி 17ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

இது போன்ற சம்பவங்களால் 2024 ஜூலைக்குள் பாலர் பள்ளிகளிலும் அரசாங்க நிதியுதவி பெறும் ஆரம்பக் கால குறுக்கீட்டு நிலையங்களிலும் கண்காணிப்புக் கேமரா பொருத்த வேண்டும் என்று பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு ஆகஸ்ட்டில் உத்தரவிட்டிருந்தது.

பாலர் பள்ளிகளில் பல குழந்தைகள் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து விசாரணை நடைபெற்றுவரும் வேளையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
குழந்தை