ஆட்ட முடிவுகளை முன்கூட்டியே நிர்ணயம் செய்த சிங்கப்பூரருக்கு சிறை

ஆட்ட முடிவுகளை முன்கூட்டியே நிர்ணயம் செய்த சிங்கப்பூரருக்கு சிறை

1 mins read
f4add05d-d977-4f83-96cf-e39506c550d2
போ வெய் ஹோ - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

போ வெய் ஹோ என்னும் 30 வயது சிங்கப்பூர் ஆடவர் தாய்லாந்தில் தன் நண்பருடன் இணைந்து கூடைப்பந்து ஆட்ட முடிவுகளை முன்கூட்டியே நிர்ணயம் செய்து மோசடி செய்துள்ளார்.

அக்குற்றங்களுக்காக ஹோவுக்கு எட்டு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஹோ தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை கடந்த மாதம் 22ஆம் தேதி ஒப்புக்கொண்டார். அதைத் தொடர்ந்து அவருக்கு புதன்கிழமை தண்டனை விதிக்கப்பட்டது.

ஹோவுடன் இணைந்து குற்றம் செய்த கோ வெய் குவானும் (33), சிங்கப்பூரர். அவர் மீதான விசாரணை தொடர்கிறது.

இரு ஆடவர்களும் தாய்லாந்து கூடைப்பந்து குழுக்களுக்கு விளையாடியவர்கள் மேலும் இணையத்தில் சூதாட்டம் செய்யும் பழக்கம் கொண்டவர்கள்.

2018ஆம் ஆண்டு இரு ஆடவர்களும் இணைந்து உள்ளூர் கூடைப்பந்து குழுவில் உள்ள சில வீரர்களிடம் ஆட்ட முடிவுகளை முன்கூட்டியே நிர்ணயம் செய்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தன.

குறிப்புச் சொற்கள்
குற்றம்