பசுமைத் தரவுகளுக்கு சிங்கப்பூரின் புதிய மின்னிலக்கத் தளம்

பசுமைத் தரவுகளுக்கு சிங்கப்பூரின் புதிய மின்னிலக்கத் தளம்

1 mins read
9eb212c7-93ab-4429-ac56-8d6b766f3679
சிங்கப்பூர் நாணய ஆணையத்தால் 2020 டிசம்பர் மாதம் பசுமைத் திட்டம் தொடங்கப்பட்டது. - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

தூய்மையான, தெளிவான தரவுகளின் மூலம் பசுமையான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க சிங்கப்பூர் மேற்கொண்டு வரும் முயற்சிகள் மேலும் முன்னேற்றம் கண்டுள்ளன. புதிய ஒருங்கிணைந்த மின்னிலக்கத் தளம் அந்த முயற்சிக்குக் கைகொடுக்க உள்ளது.

Gprnt.ai எனப்படும் அந்த புதிய தளம், சிங்கப்பூரின் நீடித்த நிலைத்தன்மைக்குரிய தரவுகளை ஆதரிக்கும் வகையிலான பசுமைத் திட்டத்தின்கீழ் ஏற்கெனவே இயங்கும் முன்னோடி முயற்சிகளை ஒருங்கிணைக்கும்.

சிங்கப்பூர் நாணய ஆணையத்தால் 2020 டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட பசுமைத் திட்டம், இஎஸ்ஜி எனப்படும் சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகத்தன்மை தரவுகளை நிறுவனங்கள் தயார்ப்படுத்தி அளிப்பதற்கான அடிப்படை அம்சங்களை வகுக்கும்.

‘கிரீன்பிரிண்ட் டெக்னாலாஜிஸ்’ என்னும் புதிய நிறுவனம் வழிநடத்தும் மின்னிலக்கத் தளம் 2024ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் நேரடிச் சேவையைத் தொடங்கி படிப்படியாக முன்னேற்றம் காணும்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்