மீண்டும் வந்துவிட்டது ‘நேவி@விவோ23’ கண்காட்சி

மீண்டும் வந்துவிட்டது ‘நேவி@விவோ23’ கண்காட்சி

1 mins read
72125a6e-88ba-4953-bc7a-1cbd5a7c129e
இம்மாதம் 17 ஆம் தேதியிலிருந்து 19 ஆம் தேதி வரை கண்காட்சி நடைபெறுகிறது. - படம்: தினேஷ் குமார்
Google News Preferred Icon

சிங்கப்பூர் குடியரசு கடற்படையின் முக்குளிப்புப் பிரிவைப் பற்றி பலர் அதிகம் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால், பொதுமக்கள் சிங்கப்பூர் குடியரசு கடற்படை நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஏற்பாடு செய்துள்ள அதன் ‘நேவி@விவோ23’ கண்காட்சி மூலம் சிங்கப்பூர் குடியரசு கடற்படையை ஒட்டிய இதுபோன்ற பல சுவாரசியமான தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.

இலவச அனுமதியுடன் நடைபெறவிருக்கும் இக்கண்காட்சியில் இடம்பெறும் அம்சங்களில் ஒன்றான கடலோரக் கண்காட்சியில் பொதுமக்கள் சிங்கப்பூரின் கடல்துறைக்கு சிங்கப்பூர் குடியரசு கடற்படையின் பங்கு எவ்வளவு வலிமையாக உள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

சிங்கப்பூர் கடற்படையின் ஆகப் பெரிய கப்பல்களில் ஒன்றான ‘ஆர்எஸ்எஸ் என்டீவர்’ எனப்படும் 141 மீட்டர் நீளமுள்ள எண்டூரன்ஸ் கிளாஸ் தரையிறங்கும் டேங்க் கப்பலில் ஏறி பார்வையிடும் அரிய வாய்ப்பை பொதுமக்கள் பெறலாம்.

அத்துடன், பொதுமக்கள் விரைவுக் கப்பல் சவாரிகளை மேற்கொண்டு சிங்கப்பூரின் தெற்குக் கரையோரப் பகுதியைக் காணவும் முடியும். சிறுவர்களுக்கான கதை சொல்லும் அங்கங்களும், கலை நிகழ்ச்சிகளும் காத்துக்கொண்டிருக்கின்றன.

இம்மாதம் 17ஆம் தேதியிலிருந்து 19ஆம் தேதி வரை விவோசிட்டி கடைத் தொகுதியில் இடம்பெறவிருக்கும் கண்காட்சி பொதுமக்களுக்கு இலவச அனுமதியுடன் நடைபெறும். குறிப்பிட்ட அம்சங்களுக்கு மட்டும் வாக்குப்பதிவு மூலம் நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. கண்காட்சி ஒவ்வொரு நாளும் காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

கண்காட்சி பற்றிய கூடுதல் தகவல்களுக்கு https://go.gov.sg/NV23 இணையத் தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்
கடற்படைகண்காட்சிசிங்கப்பூர்