சிங்கப்பூர் உட்பட உலகம் முழுவதும் பரவும் சீனாவின் சட்டவிரோதக் கும்பல்

சிங்கப்பூர் உட்பட உலகம் முழுவதும் பரவும் சீனாவின் சட்டவிரோதக் கும்பல்

1 mins read
654d9ed3-8143-4ab6-a6f1-f8618b8908ac
இணைய வர்த்தக மோசடியில் ஈடுபட்டதாக நம்பப்படும் சந்தேக நபர்களை இம்மாதம் 11ஆம் தேதி ஹெனானில் உள்ள ஷெங்ஷோவ் ஸின்ஷெங் விமான நிலையத்தில் காவல்துறையினர் அழைத்துச் சென்ற காட்சி. - படம்: சைனா டெய்லி
Google News Preferred Icon

சீனாவைச் சேர்ந்த குற்றவியல் கும்பல்கள் ஆசிய-பசிபிக் வட்டாரம் முழுவதும் கால் பதித்து பிலிப்பீன்ஸ், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் தளம் அமைத்து செயல்படுகின்றன.

சென்ற பிப்ரவரியில் ஆஸ்திரேலியாவின் சிட்னி காவல்துறை தொடர்ச்சியாக மேற்கொண்ட சோதனைகளில் ஒன்பது சீன நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆஸ்திரேலியாவிலிருந்து செயல்பட்ட இந்தக் கும்பல், மற்ற குற்றவியல் கும்பல்களுக்கு நிழல் வங்கி முறையை இயக்கியதாகக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களில் ஸ்டீவன் ஸின்னும் ஒருவர். இவர், ஆஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்டு செயல்படும் சூதாட்ட மன்னன் ஆல்வின் சாவ்வின் வர்த்தகப் பங்காளியாவார். கடந்த ஜனவரி மாதம் சட்டவிரோத சூதாட்டம் மற்றும் பிற குற்றச்செயல்களுக்காக சீனாவில் 18 ஆண்டுகள் இவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஐநா அமைதி கழகத்தின் (யுஎஸ்ஐபி) மியன்மார் நாட்டுக்கான திட்ட இயக்குநரான ஜேசன் டவர், இத்தகைய குற்றவியல் கும்பல்கள் பில்லியன் கணக்கான மூலதனத்துடன் செயல்படுவதாகத் தெரிவித்தார்.

இந்தக் குற்றவியல் கும்பல்கள் கம்போடியா மற்றும் லாவோஸில் இருந்து செயல்படுகின்றன. மேலும் லண்டன், துபாய் மற்றும் சிங்கப்பூர் உட்பட உலகெங்கிலும் உள்ள நிதி மையங்களை குறிவைத்து வருகின்றன.

தென்கிழக்கு ஆசியாவில் செயல்படும் சீன குற்றவியல் கும்பல்கள் இப்போது உலகம் முழுவதும் பரவிவருவதைக் காண முடிகிறது. இவ்வட்டாரத்தில் 50க்கும் மேற்பட்ட வெவ்வேறு நாடுகளில் இருந்து மக்களைக் கடத்துவதிலும் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்,” என்று திரு டவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்