சமய நல்லிணக்க அதிபர் மன்ற உறுப்பினர்களை அதிபர் நியமித்தார்

சமய நல்லிணக்க அதிபர் மன்ற உறுப்பினர்களை அதிபர் நியமித்தார்

2 mins read
dd34e52c-2ae9-4276-95c0-3b47ca6b5ecb
அதிபர் மன்றத்திற்கு இதர ஒன்பது பேருடன் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் மூத்த நீதிபதி சாவ் ஹிக் டின் மூன்றாண்டுகளுக்கு நியமிக்கப்பட்டு இருக்கிறார். - படம்: சிங்கப்பூர் நீதிமன்றம் 

சிங்கப்பூரின் அதிபர் தர்மன் சண்முகரத்னம், சமய நல்லிணக்கத்திற்கான அதிபர் மன்றத்தின் தலைவராக உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் மூத்த நீதிபதி சாவ் ஹிக் டின்னை நியமித்து இருக்கிறார்.

திரு சாவ்வின் நியமனம் பற்றி அதிபர் அலுவலகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. அவரோடு அந்த மன்றத்தில் இதர ஒன்பது பேரும் செப்டம்பர் 15 முதல் மூன்றாண்டு காலத்திற்குப் பதவி வகிப்பார்கள்.

சமய நல்லிணக்கத்திற்கான அதிபர் மன்றம் 1992 ஆகஸ்ட்டில் சமய நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டத்தின்கீழ் அமைந்தது.

அந்த மன்றத்தின் தலைவரையும் உறுப்பினர்களையும் அதிபர் நியமிக்கிறார்.

அமைச்சரோ, நாடாளுமன்றமோ தன்னிடம் தெரிவிக்கும் விவகாரங்கள் தொடர்பில் அந்த மன்றம் உள்துறை அமைச்சருக்கு ஆலோசனை வழங்குகிறது.

சமய நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டத்தின்கீழ், பிறப்பிக்கப்படும் உத்தரவுகளைப் பரிசீலித்து அவற்றைக் கட்டுப்படுத்துவதன் தொடர்பில் அதிபருக்கு அந்த மன்றம் பரிந்துரைகளைச் செய்கிறது.

சிங்கப்பூரின் முஃப்தி டாக்டர் நசிருதீன் பின் முகம்மது நாசர்;

சிங்கப்பூர் ரோமன் கத்தோலிக்க பேராயர் அதிமேற்றிராணியார் கார்டினல் வில்லியம் கோ;

சீக்கிய ஆலோசனை சபையின் முன்னாள் தலைவர் சுர்ஜித் சிங்;

சிங்கப்பூர் இந்திய வர்த்தக தொழில் சபையின் முன்னாள் தலைவர் எம் ராஜாராம்;

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அலுவலக தலைமை நிர்வாகி திருவாட்டி ஜோதிகா ராமனாதன்;

சிங்கப்பூர் தேசிய தேவாலங்கள் மன்றத்தின் முன்னாள் தலைவர் பிஷப் எமிரைட்ஸ் வீ பூன் ஹுப்;

சிங்கப்பூர் பௌத்தக் கூட்டமைப்பின் தலைவர் செக் குவாங் பிங்;

தாவோயிசத்தவர் கூட்டமைப்பின் கல்வித்துறை ஆலோசகர் இணைப் பேராசிரியர் லீ சியுக் யின்;

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் தலைவர் பேராசிரியர் லில்லி கோங் ஆகியோர் மன்றத்தில் இடம்பெற்று இருக்கிறார்கள்.

குறிப்புச் சொற்கள்