வானொலி அறிவிப்பாளரைத் தாக்கிய ஆடவருக்கு நான்கு வாரச் சிறை

வானொலி அறிவிப்பாளரைத் தாக்கிய ஆடவருக்கு நான்கு வாரச் சிறை

1 mins read
3e2ea868-7ce8-4e37-b5f9-f401408c3abf
வில்லியம் ஆவ் சின் சாய் என்ற ஆடவர், ஆர்ச்சர்ட் எம்ஆர்டி நிலையத்தில் ஜூலை 26ஆம் தேதி தன்னுடைய பாதையை மறித்து தன் கையில் குத்தியதாக ஒன் எஃப்எம் 91.3 வானொலி அறிவிப்பாளர் செரில் மைல்ஸ் (இடது) கூறினார். - படங்கள்: செரில் மைல்ஸ் 
Google News Preferred Icon

இயோன் ஆர்ச்சர்ட் கட்டடத்தில் 13 வயது சிறுமியைத் தாக்கிய ஓர் ஆடவர் அதற்கு சில நேரம் கழித்து வானொலி அறிவிப்பாளரான செரில் மைல்ஸ் என்ற மாதை தாக்கினார்.

வில்லியம் ஆவ் சின் சாய், 52, என்ற அந்த ஆடவருக்கு வெள்ளிக்கிழமை நான்கு வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

வில்லியம் ஆவ், 37 வயது ஆடவர் ஒருவரையும் தாக்கினார். அவர் நான்கு குற்றச்சாட்டுகளின் பேரில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அவற்றில் மூன்று குற்றச்சாட்டுகள் பலவந்தமாக நடந்துகொண்டது தொடர்பானவை.

மற்றொரு குற்றச்சாட்டு அலைக்கழிப்பு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அவர் குற்றம் புரிந்ததாகக் கூறுகிறது.

இந்தக் குற்றத்திற்காக அவர் அதிக தண்டனையை எதிர்நோக்கினார்.

வில்லியம் ஆவுக்கு வன்செயலே வேலை என்று தெரிவிக்கப்பட்டது.

அவருக்கு 2021 நவம்பரில் இரண்டு வாரம் 10 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஒரு பேருந்து ஓட்டுநர் இருந்த திசையில் அவர் எச்சில் துப்பினார். பேருந்து பயணி ஒருவரின் முகத்திலும் இரண்டு முறை அவர் துப்பிவிட்டார்.

வேண்டுமென்றே காயம் விளைவித்தது, பலவந்தமாக நடந்துகொண்டது ஆகிய குற்றங்களையும் அவர் செய்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்