லீ சியன் யாங்கிற்கு எதிராக அமைச்சர்கள் அவதூறு வழக்கு

லீ சியன் யாங்கிற்கு எதிராக அமைச்சர்கள் அவதூறு வழக்கு

1 mins read
73db62be-d5ac-4e71-9b93-6b51f9083279
ரிடவுட் பங்களாக்கள் தொடர்பில் தெரிவிக்கப்பட்ட தகவல்களின் பேரில் அமைச்சர்களான கா சண்முகம், டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் இருவரும் லீ சியன் யாங்கிற்கு (இடது) எதிராக அவதூறு வழக்கு தொடுத்து இருக்கிறார்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், சாவ் பாவ் கோப்புப்படங்கள்
Google News Preferred Icon

சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் இருவரும் ரிடவுட் ரோடு பங்களா விவகாரம் தொடர்பில் திரு லீ சியன் யாங்கிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடுத்து இருக்கிறார்கள்.

திரு லீ சியன் யாங், சிங்கப்பூரின் முதல் பிரதமர் திரு லீ குவான் இயூவின் இளைய புதல்வர். இப்போதைய பிரதமர் திரு லீ சியன் லூங்கின் சகோதரர்.

சிங்கப்பூர் நீதிமன்றங்களின் இணையத்தளத்தில் இடம்பெற்று இருக்கும் விசாரணைக்கு வரவிருக்கின்ற வழக்குகளின் பட்டியலைப் பார்க்கையில், இந்த வழக்குக்கு முந்தைய வழக்கு செப்டம்பர் 5ஆம் தேதி இடம்பெறும் என்று தெரிகிறது.

இந்த அவதூறு வழக்கில் தவீந்தர் சிங் சேம்பர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் குழு இரண்டு அமைச்சர்களையும் பிரதிநிதிக்கிறது.

ரிடவுட் ரோட்டில் இருக்கும் இரண்டு பங்களாக்களைத் தாங்கள் வாடகைக்கு எடுத்து இருப்பதன் தொடர்பில் பொய் புகார்களை திரு லீ சியன் யாங் தெரிவித்து இருக்கிறார் என்றும் அதற்காக அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவருக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்போவதாகவும் இரண்டு அமைச்சர்களும் ஜூலை 27ஆம் தேதி தெரிவித்து இருந்தனர்.

குறிப்புச் சொற்கள்