மத்திய சேமிநிதி உறுப்பினர்கள், இந்த ஆண்டின் முதல் காலாண்டில், தங்கள் மத்திய சேமநிதி ஓய்வுகால கணக்கில் இருந்து $3.3 பில்லியன் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் 55 வயதுக்கும் மேற்பட்டவர்கள். எடுத்துக்கொள்ளப்பட்ட இதர தொகை யில் சிபிஎஸ் லைஃப் போன்ற ஓய்வு கால திட்டங்களின்கீழ் மாதாமாதம் பெறப்பட்ட தொகை, ஆயுள் முழுவதும் கிடைக்கும் ஆண்டுத்தொகை ஆகியவை அடங்கும்.
மத்திய சேமநிதி உறுப்பினர்களில் 55 வயதைக் கடந்தவர்கள், மார்ச் 31ஆம் தேதி வரைப்பட்ட மூன்று மாதங்களில் 217,277 முறை $2.5 பில்லியன் பணம் எடுத்துக்கொண்டனர்.
இதைக் கணக்கிட்டுப் பார்க்கையில் ஒவ்வாரு முறையும் ஏறக்குறைய $11,500 எடுத்துக்கொள்ளப்பட்டது.
இப்படி எடுத்துக்கொள்ளப்பட்ட சராசரி தொகை சென்ற ஆண்டில் $9,250 ஆக இருந்தது. மத்திய சேமநிதி சாதாரணக் கணக்கில் இருக்கும் தொகை, சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 1.8% குறைந்து ஏறக்குறைய $180 பில்லியனாக இருந்தது என்பது சேமநிதிக் கழகத்தின் புதிய புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருகிறது.
தங்கள் கணக்கில் இருக்கவேண்டிய தொகையைவிட அதிகமாக இருந்த தொகையை எடுத்துக்கொண்ட 55 வயதைக் கடந்தவர்கள் அதிகமாக இருந்தனர்.
சிலர் பணத்தை எடுத்து கருவூல சேமிப்புப் பத்திரங்களை வாங்கினர். மற்றவர்கள் வீட்டுக் கடனுக்காக பணத்தை எடுத்துக்கொண்டனர்.
இதுவே சாதாரண கணக்கில் தொகை குறைந்ததற்கான காரணங்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

