நம்பிக்கை மோசடி செய்த முன்னாள் நிர்வாகிக்குச் சிறைத்தண்டனை

நம்பிக்கை மோசடி செய்த முன்னாள் நிர்வாகிக்குச் சிறைத்தண்டனை

1 mins read
3170f626-bc16-413f-86ec-a376eafcec31
-

சூதாட்ட நிலை­யக் கட்­டுப்­பாட்டு ஆணை­யத்­தின் முன்­னாள் மூத்த நிர்வாகிக்கு 750க்கு மேற்­பட்ட அச்சு மைநிரப்­பு­க­லன்­களை முறை­கே­டாக இணை­யம் வழி­யாக விற்­பனை செய்­த­தன் தொடர்­பில் ஈராண்­டு­கள், ஒரு மாதச் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

ஆணை­யத்­துக்­குச் சொந்­த­மான அவற்­றின் மொத்த மதிப்பு $93,000. ஸுல்­கி­ஃப்லி யாக்­கோப் எனும் 45 வயது ஆட­வர், நம்­பிக்கை மோசடி தொடர்­பில் சுமத்­தப்­பட்ட இரு குற்­றச்­சாட்டு­களை ஒப்­புக்­கொண்­டார்.

தண்­டனை விதிக்­கும்­போது மூன்­றா­வது குற்­றச்­சாட்­டும் கருத்­தில் கொள்­ளப்­பட்­ட­தாக நீதி­மன்­றம் தெரி­வித்­தது.

ஸுல்­கி­ஃப்லி 2016ஆம் ஆண்டு ஏப்­ரல் 1ஆம் தேதிக்­கும் 2018 அக்­டோ­பர் 30ஆம் தேதிக்­கும் இடையே தேவைக்கு அதிக­மான அச்சு மைநிரப்­பு­கலன்­களை வாங்­கி­னார். கூடு­த­லா­ன­வற்றை விற்று அந்­தத் தொகை­யைத் தான் எடுத்­துக்­கொள்ள அவர் திட்­ட­மிட்­டார். கேர­சல் இணைய வர்த்­த­கத் தளத்­தின்­மூ­லம் விற்­றார்.

ஆணை­யம் இத­னைக் கண்­ட­றிந்து காவல்­து­றை­யி­டம் புகா­ர­ளித்­தது. 2020ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி ஸுல்­கிஃப்லி கைது செய்­யப்­பட்­டார்.

பிணை­யில் விடு­விக்­கப்­பட்ட அவர், இவ்­வாண்டு ஜன­வ­ரி­யில் $25,000ஐத் திருப்­பிச் செலுத்­தி­ய­தா­கக் கூறப்­பட்­டது.

இம்­மா­தம் 28ஆம் தேதி அவர் தனது தண்­ட­னையை நிறை­வேற்­றத் தொடங்­கு­வார்.

நம்­பிக்கை மோச­டிக் குற்­றத்­துக்கு அதி­க­பட்­சம் 20 ஆண்டு வரை­யி­லான சிறைத்­தண்­ட­னை­யு­டம் அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம்.