கொவிட்-19 கட்டுப்பாடுகள் விலகியதால் பந்தயம் கட்டுதல் கூடியது

கொவிட்-19 கட்டுப்பாடுகள் விலகியதால் பந்தயம் கட்டுதல் கூடியது

2 mins read
8e5a3557-5eda-4842-9181-5b69c1858f01
-

கடந்த இரண்டு நிதி­யாண்­டு­களில் விளை­யாட்­டுப் பந்­த­யங்­கள், 'சிங்­கப்­பூர் பூல்ஸ் லாட்­டரி' பந்­த­யங்­கள் ஆகி­ய­வற்­றுக்­குக் கூடு­தல் செலவு செய்­யப்­பட்­டி­ருப்­ப­தா­கத் தெரி­ய­வந்­துள்­ளது.

கொவிட்-19 கிரு­மிப் பர­வல் கட்­டுப்­பா­டு­கள் விலக்­கப்­பட்­டன, உல­க­ள­வில் விளை­யாட்­டுப் போட்­டி­கள் மீண்­டும் முழு­வீச்­சில் நடை­பெ­றத் தொடங்­கி­யது ஆகி­யவை அதற்­கான முக்­கி­யக் கார­ணங்­களில் சில.

சிங்­கப்­பூர் பந்­த­யப் பிடிப்­புக் கழ­கத்­தின் சென்ற நிதி­யாண்டு கடந்த மார்ச் மாதம் நிறை­வ­டைந்­தது. அதில் மொத்­தம் 9.2 பில்­லி­யன் வெள்ளி லாட்­ட­ரி பந்­த­யங்­க­ளுக்­கும் விளை­யாட்­டுப் பந்­த­யங்­க­ளுக்­கும் செலவு செய்­யப்­பட்­டது. இந்தத் தொகை, முந்­தைய நிதி­யாண்­டில் பதி­வா­ன­தைக் காட்­டி­லும் சுமார் 40 விழுக்­காடு அதி­கம்.

மேலும், கடந்த 10 ஆண்­டு­களில் சென்ற நிதி­யாண்­டில்­தான் பந்­த­யங்­க­ளுக்கு ஆக அதி­கத் தொகை செல­வி­டப்­பட்­ட­தென ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் சென்ற மாதம் தெரி­வித்­தி­ருந்­தது.

"சூதாட்­டப் பிரச்­சினை, அதில் ஈடு­படும் தனி­ந­பர்­கள் மட்­டு­மின்றி அவர்­க­ளின் குடும்­பத்­தா­ரை­யும் அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளை­யும் பாதிக்­கிறது; அத­னால் சூதாட்­டப் பிரச்­சி­னை­யைக் கையாள்­வ­தில் சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு கவ­னம் செலுத்தி வரு­கிறது," என்­று சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சின் நாடா­ளு­மன்­றச் செய­லா­ளர் எரிக் சுவா நேற்று நாடா­ளு­மன்றத்தில் கூறினார்.

நிலை­மை­யைக் கண்­காணித்து சூதாட்­டப் பிரச்­சி­னை­யைச் சமா­ளிக்­கக் கூடு­தல் நட­வ­டிக்­கை­கள் தேவைப்­ப­டுமா என்­பதை ஆராய உள்­துறை அமைச்சு, சூதாட்­டக் கட்­டுப்­பாட்டு ஆணை­யம் ஆகி­ய­வற்­று­டன் சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு தொடர்ந்து இணைந்து பணி­யாற்­றும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சின் அர­சாங்க நாடா­ளு­மன்­றக் குழு­வின் தலை­வரும் மரீன் பரேட் குழுத்­தொ­குதி நாடாளு­மன்ற உறுப்­பி­னருமான சியா கியன் பெங்கின் கேள் விக்குத் திரு சுவா பதி­ல­ளித்­தார்.