பொது இடத்தில் தொந்தரவு: இளைஞர் மீது குற்றச்சாட்டு

1 mins read
5695d9dc-2a22-49c5-8dce-176e20d86d46
-

எஸ்ரா ஜித் சிங், 19, என்ற இளைஞர், எம்­ஆர்டி ரயி­லில் ஓர் ஓரத்தில் இருக்­கும் முதியவருக் கான இருக்­கை­யில் அமர்ந்து பயணம் செய்த இஸ்­மா­யில் முகம்­மது தவான் என்­ப­வ­ரி­டம் சட்டாம் பிள்ளைத்தனமாக நடந்­து­கொண்டு கோழை என்று சொல்­லும்­படி அவரை கட்­டா­யப்­ப­டுத்தி யதா­கக் கூறப்­ப­டு­கிறது.

அந்த முதிய­வ­ரின் தாயார் பற்றி தவ­றாக அந்த இளை­ஞர் பேசி­ய­தும் அந்­தச் சம்­ப­வத்­தைக் காட்டும் காணொளி மூலம் தெரிந்தது.

ஆகஸ்ட் 8ஆம் தேதி இரவு 11 மணிக்கு பாய லேபார் ரயில் நிலை­யத்­திற்­கும் கெம்­பங்­கான் நிலை­யத்­திற்­கும் இடை­யில் ரயி லில் நிகழ்ந்த அச்சம்­ப­வம் தொடர்­பில் நேற்று சிங் மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டது. பொது இடத்­தில் தொந்­த­ரவு செய்­த­தாக குற்­றச்­சாட்டு கூறு­கிறது.

பொது இடத்­தில் இடை­யூறு விளை­வித்­த­தன் தொடர்­பி­லான குற்­றச்­சாட்­டின் பேரில் குற்­ற­வாளி என்று தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டால் சிங்­கிற்கு $1,000 வரை அப­ரா­தம் விதிக்க முடி­யும்.