பாலியல் வன்கொடுமை வழக்கு: ஆடவருக்கு சிறை, பிரம்படி

1 mins read
452d70cb-4901-48a2-8182-85dd186c6ead
-

பாசிர் ரிஸ் ஓய்வுத்தள விடுதி யில் மதுபோதையில் இருந்த ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக் கில் தொடர்புடைய இறுதி நபருக்கு நேற்று எட்டு மாதச் சிறையும் இரண்டு பிரம்படி களும் விதிக்கப்பட்டன.

யோங் சுன் ஹோங் எனும் அந்த 32 வயது ஆடவர் அந்தப் பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை புரியவில்லை என்றாலும் யோங் ஓய்வுத்தள விடுதிக்குச் செல்லும் வழியில் ஒரு காரில் அவரை மான பங்கப்படுத்தினார் என்று கூறப்பட்டது.

பெண்ணை மானபங்கம் செய்த ஒரு குற்றச்சாட்டை யோங் கடந்த மாதம் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார்.