தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு அதிக தேவை; சம்பளம் கூடுகிறது

தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு அதிக தேவை; சம்பளம் கூடுகிறது

1 mins read
b74b74e8-3d7b-4fc4-a1a3-36c8ce83c1de
-
Google News Preferred Icon

உலகில் தகவல் தொழில்நுட்பத் துறை அதிவேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் அந்தத் துறையைச் சேர்ந்த வல்லுநர்களுக்குத் தேவை அதிகமாகி உள்ளது.

போட்டியில் முதன்மையில் திளைக்க முதலாளிகள் விரும்புகிறார்கள். இதன் விளைவாக அத்தகைய ஊழியர்களின் சம்பளம் கூடுகிறது. பற்றாக்குறை அதிகமாகிறது என்று கவனிப்பாளர்கள் கூறுகிறார்கள்.

ஊழியர்கள் வேலை மாறும் போக்கு காரணமாக சம்பளம் 15% முதல் 20% கூடுவதாக 'மேன்பவர்குரூப்' என்ற நிறுவனத்தின் சிங்கப்பூர் நிர்வாகி லிண்டா டியோ தெரிவித்தார்.

இத்துறையில் ஊழியர்களுக்கு நிலவும் பற்றாக்குறை காரணமாகவும் வெளிநாட்டினரை வேலைக்கு எடுக்க கடும் கட்டுப்பாடுகள் நடப்பில் இருப்பதாலும் தங்களுக்குத் தேவைப்படக்கூடிய தொழில்நுட்ப ஊழியரை வேலையில் சேர்ப்பது இங்குள்ள நிறுவனங்களுக்கு இன்னும் சிரமமாகி இருக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.