நிர்வாணப் படங்களும் மிரட்டலும்

1 mins read
c22066a1-b627-4899-ba8e-9bec755447c0
-

இளைஞர் ஒருவர், நிர்வாண படங்களைத் தனக்கு அனுப்பி வைக்கும்படி மூன்று பெண்களை இணங்கச் செய்தார். அந்தப் படங்கள் அனுப்பப்பட்டதும் தன் கோரிக்கைகளை நிறைவேற்ற வில்லை என்றால் படங்களைப் புழக்கத்தில் விட்டுவிடுவேன் என்று அந்த இளைஞர் பெண்களை மிரட்டினார்.

அவருக்கு வயது இப்போது 20. ஆகிறது. 10 குற்றச்சாட்டு களின் பேரில் நேற்று அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதர 13 குற்றச்சாட்டுகள் தண்டனை விதிக்கப்படும்போது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும். அவர் 2018 மே மாதம் குற்றச்செயல்களைச் செய்யத் தொடங்கினார் என்று கூறப்பட்டது. இளைஞருக்கு அடுத்த மாதம் தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.