சிங்கப்பூரில் அடுத்த இரு மாதங்களுக்கு கனமழை பெய்யக்கூடும்

சிங்கப்பூரில் அடுத்த இரு மாதங்களுக்கு கனமழை பெய்யக்கூடும்

1 mins read
d4b465ef-ce7e-4649-9d14-d6d25154fd4a
-
Google News Preferred Icon

சிங்கப்பூரில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியப் பெருங்கடல் தட்பவெப்பம் என்ற ஒரு பருவநிலையே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தட்பவெப்பம் இந்த மாதம் எதிர்மறை கட்டத்தை எட்டியது. இது வரும் அக்டோபர் வரை நீடிக்கும் என்றும் பிறகு படிப்படியாக வலுவிழந்துவிடும் என்றும் சிங்கப்பூர் வானிலை ஆய்வு நிலைய பேச்சாளர் தெரிவித்தார்.

இத்தகைய பருவநிலை காரணமாக இந்தியப் பெருங்கடல் பகுதியில் கிழக்கு முனையில் உள்ள சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் வழக்கத்தைவிட அதிகமாக மழை பெய்யும் வாய்ப்பு உண்டு.

குறிப்புச் சொற்கள்