உணவங்காடி நிலையங்களின் தூய்மை - அதிகமானோர் அதிருப்தியில்

1 mins read
dec9418c-b575-4f1c-ab22-d7870a4b6b53
-

சிங்கப்பூர்: உணவங்காடி நிலையங்களின் தூய்மை குறித்து அதிகமானோர் அதிருப்தியில் உள்ளனர். வருகையாளர்களில் ஒருசிலர் தங்களால் முடிந்த பங்கை ஆற்றாமல் இருந்தது இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

உணவுக் கடைகளில் பாதிக்கும் குறைவானவைகளே தத்தம் சாப்பாட்டுத் தட்டுகளை முறையாக அவற்றின் கடைகளுக்குத் திருப்பித் தராததே இதற்குக் காரணமென்று சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வு ஒன்று குறிப்பிட்டுள்ளது.

உணவுக் கடையின் தூய்மை குறித்த அதிருப்தி, கொவிட்-19 கிருமிப்பரவலின்போது தூய்மையின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வும் ஒரு காரணம் என அந்தப் பல்கலைக்கழகம் தனது செய்தியாளர் அறிக்கையில் குறிப்பிட்டுளளது.

" தொற்றுநோய்களின் பரவலை அடுத்து பொதுச்சுகாதாரம், பொதுத் தூய்மையைக் காட்டிலும் முக்கியமானது," என்று சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியர் பாலின் டே ஸ்ட்ரோகன் தெரிவித்தார். இவர்,தேசிய பல்கலைக்கழகத்தின் கொள்கை ஆய்வு நிலையத்தின் தலைமை ஆய்வாளர் டாக்டர் மேத்தியூ மேத்தியூசுடன் ஆய்வை வழிநடத்தினார்.

"எப்போதும் நமக்காக துப்புரவு பணியாளர்கள் செயல்படுவதை நம்பியே இருக்க முடியாது. நாம் வாழும் இடங்களின் தரத்தைக் கட்டிக்காக நாம் என்ன செய்யலாம் என்பதையும் நினைத்துப் பார்க்கவேண்டும்," என்று அவர் கூறினார்.