ஆப்பிரிக்கா: ஐவரி கோஸ்டில் மீண்டும் எபோலா

ஆப்பிரிக்கா: ஐவரி கோஸ்டில் மீண்டும் எபோலா

1 mins read
21fd2dc8-7420-49c9-90f1-8af89ea6e29a
-
Google News Preferred Icon

மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் ஐவரி கோஸ்ட் என்ற நாட்டில் தற்போது எபோலா கிருமி பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருபது ஆண்டுகளில் எபோலா பரவல் இல்லாமல் இருந்த நாட்டில் இந்தப் புதிய சூழல் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கினியாவிலிருந்து நாடு திரும்பிய ஒரு நோயாளி இந்நோயை அங்கு கொண்டு வந்திருப்பதாக ஐவரி கோஸ்டின் சுகாதார அமைச்சு சனிக்கிழமை உறுதி செய்தது. தலைநர் அபிட்ஜனில் உள்ள ஓர் மருத்துவமனையில் அந்த நோயாளி சேர்க்கப்பட்டார்.

"நான்கு மில்லியன் பேருக்கு அதிகம் வாழும் அபிட்ஜன் நகரில் இந்தக் கிருமிப்பரவல் ஏற்பட்டது மிகவும் அக்கறைக்குரியது," என்று உலக சுகாதார நிறுவனத்தின் வட்டார இயக்குநர் டாக்டர் மட்ஷிடிசோல மெவேத்தி தெரிவித்தார்.

1994ஆம் ஆண்டுக்கு பிறகு எபோலா இங்கு பரவுவது இரண்டாவது முறை. நோய்வாய்ப்பட்ட குரங்கு ஒன்றுக்கு பிரேத பரிசோதனை செய்தவருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டபோது முன்னதாக அங்கு எபோலா சிலருக்குப் பரவியிருந்தது.

எபோலா கிருமித்தொற்றுகள் அரிதாக இருந்தாலும் மிகவும் கடுமையான நோயாகும். உடல் முழுவதும் ரத்த காயம், சிராய்ப்புக் காயம் போன்றவற்றை ஏற்படுத்தி மிக விரைவிலேயே மரணத்தை விளைவிக்கக்கூடியது இந்நோய்.