சிங்கப்பூர் வரலாற்றிலேயே ஆக உயரமான அஞ்சல்தலைகளை சிங்போஸ்ட் நேற்று வெளியிட்டது.
ஒவ்வொரு அஞ்சல்தலையின் உயரம் 81.6 மில்லிமீட்டராகும்.
அஞ்சல்தலைகளின் விலை 30 காசிலிருந்து $1.40 வரை ஆகும். $7.35 பெறுமானமுள்ள அன்பளிப்புப் பொட்டலங்களையும் வாங்கலாம். அவற்றை அனைத்து அஞ்சல் நிலையங்கள், அஞ்சல்தலை விற்கும் கடைகள், shop.singpost.com எனும் இணையப்பக்கத்துக்குச் சென்று வாங்கலாம்.
நினைவுப்பொருளாக இந்த ஆறு அஞ்சல்தலைகளைக் கொண்ட தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளன.
பசுமை அம்சங்களுடனான முக்கிய கட்டடங்கள் அஞ்சல்
தலைகளில் இடம்பெறுகின்றன.
அஞ்சல்தலைகளில் இடம்பெறும் கட்டடங்கள் கடந்த பத்து ஆண்டுகளில் அரசாங்கம் அல்லது தனியார் சொத்து மேம்பாட்டாளர்களால் கட்டப்பட்டவை.
கூ டெக் புவாட் மருத்துவமனை, ஒவேசியா ஹோட்டல் டௌன்டவுன், கம்போங் அட்மிரல்ட்டி, ஜுவல் சாங்கி விமான நிலையம், ஸ்கைடெரஸ்@டோசன், லீ கொங் சியான் இயற்கை வரலாறு அரும்பொருளகம் ஆகியவை அவற்றில் அடங்கும்.
இயற்கை வரலாறு அரும்
பொருளத்தைத் தவிர்த்து, அஞ்சல்தலைகளில் இடம்பெறும் ஏனைய கட்டடங்கள் அதிபரின் வடிவமைப்பு விருதைப் பெற்றவை. இந்த விருதைப் பெற்ற இருவர் அரும்பொருளகத்தை வடிவமைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் 'லஷ்' திட்டத்துக்கு ஏற்ப இந்த ஆறு கட்டடங்களின் வடிவமைப்பில் பசுமை அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கதப்பட்டுள்ளது.

