சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் நுழைய முயன்ற, 21 முதல் 38 வயதுக்கு இடைப்பட்ட ஆடவர் ஐவர் கைது செய்யப்பட்டனர்.
கடலோரக் காவல் படையின் கண்காணிப்பு அமைப்பு மூலம் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக போலிஸ் தெரிவித்தது. துவாஸ் கரையை நோக்கி சந்தேகப் பேர்வழிகள் ஐவர் நீந்தி வந்ததாக நம்பப்படுகிறது. இதைத் தொடர்ந்து, கடலோரக் காவல் படை, ஜூரோங் போலிஸ் பிரிவு, கூர்க்கா படைப்பிரிவு, சிறப்புச் செயல்பாட்டுத் தளபத்தியம் ஆகியவற்றின் அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று, குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் அவர்களைக் கைது செய்தனர்.
பின்னர் விசாரணைக்காக குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்ட அவர்கள் குற்றமிழைத்தது உறுதியானால், ஆறு மாதம் வரை சிறையும் பிரம்படியும் விதிக்கப்படும்.

