ஈஸ்ட் கோஸ்ட் மசெக குழு உறுதி: கொடுத்த வாக்கை காப்போம்

ஈஸ்ட் கோஸ்ட் மசெக குழு உறுதி: கொடுத்த வாக்கை காப்போம்

1 mins read
89eb5291-5bbc-4ea9-a9f4-4673dac6f300
துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், (நடுவில்) தனது ஈஸ்ட் கோஸ்ட் மக்கள் செயல் கட்சி குழுவினரோடு வெள்ளிக்கிழமை இரவு செய்தியாளர்களிடம் பேசினார். படம்: துணைப் பிரதமர் ஹெங் ஃபேஸ்புக் -
Google News Preferred Icon

ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியைப் பிரதிநிதிக்கும் தாமும் தமது குழுவினரும் வரும் ஆண்டுகளில் தொகுதி மக்களுக்குத் தொடர்ந்து சேவையாற்றப்போவதாக துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் உறுதி தெரிவித்தார்.

சென்ற ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் தாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றப்போவதாகவும் அவர் உறுதி கூறினார்.

மக்கள் செயல் கட்சியின் 4ஆம் தலைமுறைத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகிக்கொள்ளப்போவதாக திரு ஹெங் வியாழக்கிழமை அறிவித்தார். அடுத்த நாள் தம் தொகுதியின் கட்சித் தொண்டர்களை அவர் சந்தித்தார். பிறகு பிடோக்கில் இருக்கும் கட்சித் தலைமையகத்தில் திரு ஹெங் செய்தியாளர்களிடம் பேசினார்.

ஈஸ்ட் கோஸ்ட் தொகுதியில் வென்ற மக்கள் செயல் கட்சிக் குழுவில் பிரதமர் அலுவலக அமைச்சர் மாலிக்கி ஓஸ்மான், துணை அமைச்சர் டான் கியாட் ஹாவ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெசிக்கா டான், ஷெரல் சான் ஆகியோரும் அடங்குவர். இவர்கள் முன்னதாக நடந்த கட்சிக் கிளைச் செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு கட்சித் தலைமையகத்திற்கு வந்தனர்.

குறிப்புச் சொற்கள்