குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு பொதுப் போக்குவரத்து பற்றுச்சீட்டு

குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு பொதுப் போக்குவரத்து பற்றுச்சீட்டு

1 mins read
ce357eca-567d-4155-8a7f-e8730638de35
பற்றுச்சீட்டுகள் இவ்வாண்டு டிசம்பர் வாக்கில் குறைந்த வருமான குடும்பங்களுக்கு கிடைக்கப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம் -
Google News Preferred Icon

குறைந்த வருமானக் குடும்பங்களின் போக்குவரத்து செலவில் உதவும் நோக்கில், அரசாங்கம் சுமார் 30,000 குடும்பங்களுக்கு பொதுப்போக்குவரத்து பற்றுச்சீட்டுகள் வழங்க இருக்கிறது. அந்தக் குடும்பங்கள் இந்தப் பற்றுச்சீட்டுக்காக விண்ணப்பிக்கத் தேவையில்லை என மக்கள் கழகமும் போக்குவரத்து அமைச்சும் இணைந்து இன்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

பற்றுச்சீட்டுகள் இவ்வாண்டு டிசம்பர் வாக்கில் குறைந்த வருமான குடும்பங்களுக்கு கிடைக்கப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

வேறு யாராவது $50 மதிப்பிலான இந்த பற்றுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், வரும் அக்டோபர் 31 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 31 வரை விண்ணப்பிக்கலாம்.

இதற்கு முன்பு 300,000 பேருக்கு $30 மதிப்பிலான பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன; ஆனால், தற்போது சாதனை அளவாக 450,000 பேருக்கு $50 பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட உள்ளன.

மாதாந்திர வருமானம் $1,200க்கு மிகாதவர்கள் பொதுப் போக்குவரத்துப் பற்றுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளோர் சமூக மன்றங்களில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் பற்றுச்சீட்டுகள் வேண்டுவோர் அல்லது விண்ணப்பத் தகுதியை சிறிய வருமான இடைவெளியில் தவறவிட்டவர்கள் சமூக மன்றங்களை நாடலாம்.

பொதுப் போக்குவரத்து நிறுவனங்களான எஸ்எம்ஆர்டி, எஸ்பிஎஸ் ஆகியவை அதிகபட்ச அளவான 4.4% கட்டண உயர்வு கோரியிருந்தபோதும், இவ்வாண்டு பொதுப் போக்குவரத்து கட்டண உயர்வு இல்லை என்று பொதுப் போக்குவரத்து மன்றம் இன்று அறிவித்தது குறிப்பிடத்தகக்து.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்கட்டணம்