பொது இடத்தில் சிறுநீர் கழித்த டாக்சி ஓட்டுநருக்கு எச்சரிக்கை விடுத்த கம்ஃபர்ட்டெல்கிரோ

பொது இடத்தில் சிறுநீர் கழித்த டாக்சி ஓட்டுநருக்கு எச்சரிக்கை விடுத்த கம்ஃபர்ட்டெல்கிரோ

1 mins read
fd995de6-7ab7-43e3-9c26-f37e182ce2d9
மார்சிலிங் எம்ஆர்டி நிலையத்துக்கு வெளியில் கம்ஃபர்ட் டெல்கிரோ டாக்சி ஓட்டுநர் ஒருவர் சிறுநீர் கழிப்பதைக் காட்டும் காணொளி இணையத்தில் வலம் வந்தது. படம்: ஸ்டோம்ப் -
Google News Preferred Icon

பொது இடத்தில் சிறுநீர் கழித்த டாக்சி ஓட்டுநருக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கம்ஃபர்ட் டெல்கிரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மார்சிலிங் எம்ஆர்டி நிலையத்துக்கு வெளியில் கம்ஃபர்ட் டெல்கிரோ டாக்சி ஓட்டுநர் ஒருவர் சிறுநீர் கழிப்பதைக் காட்டும் காணொளி இணையத்தில் வலம் வந்தது.

சிறுநீர் கழிக்க கழிப்பறையைப் பயன்படுத்தாமல் பொது இடத்தில் சிறுநீர் கழித்ததை பல சமூக ஊடகவாசிகள் பழித்துக் கூறினாலும் சிலர் அவர்மீது அனுதாபமும் காட்டினர்.

தன்னுடைய செயலுக்கு அந்த டாக்சி ஓட்டுநர் வருத்தம் தெரிவித்ததாக 'ஸ்டோம்ப்' செய்தியாளரிடம் தெரிவித்த கம்ஃபர்ட் டெல்கிரோ குழும தலைமை நிறுவனத் தொடர்பு அதிகாரி டாம்மி டான், அவரது செயலுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

குறிப்புச் சொற்கள்