குட்டை பாவடைக்குள் படமெடுத்த ஆடவருக்கு நான்கு வாரச் சிறை

1 mins read

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் ஒரு பெண்ணின் குட்டைப் பாவாடைக்குள் படமெடுத்த ஆடவர் ஒருவர் குடிநுழைவுச் சோதனைச் சாவடி (ஐசிஏ) அதிகாரிகள் இருவரால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டார்.

இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் இரவு வேளையில் 36 வயது பெண் ஒருவர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் பேருந்து ஒன்றிலிருந்து இறங்குவதைப் பார்த்தார் 31 வயது சேமிப்புக் கிடங்கு காப்பாளர் திரு லியோங் சவ் சுங்.

அந்த இரு மலேசியர்களும் சுங்கச்சாவடியின் புறப்பாட்டு மண்டபத்தை நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர். படிக்கட்டு களில் ஏறிக்கொண்டிருக்கும்போது, அந்தப் பெண் முழங் காலுக்கு மேலே குட்டைப் பாவாடை அணிந்திருந்ததைக் கவனித்த லியோங், கைபேசி மூலம் குட்டைப் பாவடைக்குள் படமெடுத்தார். பின்னர் நகரும் படிக்கட்டுகளில் ஏறும்போது இரண்டாவது முறையாக அவ்வாறு படமெடுத்தார்.

இதை அங்கு பணியில் இருந்த ஐசிஏ அதிகாரி உதவி சூப்ரின்டென்டண்ட் இங் ஜியான் ஹுவியும் அவரது சகா வும் கவனித்தனர். உடனே அவர்கள் அருகில் இருந்த போலிஸ் அதிகாரிகளிடம் லியோங்கின் செயல் பற்றி தெரிவித்தனர்.

லியாங்கை நிறுத்தி சோதித்த போலிஸ் அதிகாரிகள் அவரது கைபேசியில் அந்தப் பெண்ணின் குட்டைப் பாவடைக்குள் எடுத்த இரண்டு படங்கள் இருப்பதைப் பார்த் தனர். லியோங் கைது செய்யப்பட்டார். நேற்று அவருக்கு நான்கு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவரது கைபேசியும் பறிமுதல் செய்யப்பட்டது.