போலி அதிர்ஷ்டக் குலுக்கல்: $40,000 பறிபோனது

போலி அதிர்ஷ்டக் குலுக்கல்: $40,000 பறிபோனது

1 mins read
831d2f73-4aca-4359-8ef3-d9896dca2e76
-
Google News Preferred Icon

சாங்கி விமான நிலையத்தின் பெயரைப் பயன்படுத்தி குறைந்தது 30 அதிர்ஷ்டக் குலுக்கல் மோசடிக் குற்றங்கள் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதிர்ஷ்டக் குலுக்கலில் பரிசு கிடைத்துவிட்டதாக நம்பி சிலர் தங்கள் கடன் அட்டை, வங்கிக் கணக்கு எண்களைத் தந்தனர். இந்த மோசடிக்காரர்கள் விரிக்கும் வலையில் விழ வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு போலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஜூலை மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரை தங்களிடம் ஏமாந்தவர்களிடமிருந்து மோசடிக்காரர்கள் குறைந்தது $40,000 பறித்துவிட்டதாக போலிசார் தெரிவித்தனர்.

தொலைபேசி அல்லது வைபர் போன்ற கைபேசி செயலிகள் மூலம் மோசடிக்காரர்கள் தொடர்புகொண்டதாக அறியப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
சாங்கிவிமான நிலையம்அதிர்ஷ்டக் குலுக்கல்மோசடி