குழந்தையின் மேல் துண்டை மீட்டுக்கொள்ளும் இக்கியா

குழந்தையின் மேல் துண்டை மீட்டுக்கொள்ளும் இக்கியா

1 mins read
39afd5a2-de96-4fe7-8f00-ce1d3843dfe2
-
Google News Preferred Icon

குழந்தையின் உடை அழுக்குப்படாமல் இருப்பதற்காக அதன் கழுத்தில் கட்டப்படும் மேல் துண்டை (Matvra) இக்கியா நிறுவனம் மீட்டுக் கொள்கிறது.

அந்தத் துண்டில் இருக்கும் பொத்தானை குழந்தை பிடித்து இழுத்து விளையாடும் போது அதை குழந்தை விழுங்கிவிடக் கூடிய ஆபத்து இருப்பதை உணர்ந்து இக்கியா இவ்வாறு செய்கிறது.

அத்தகைய மேல் துண்டைத் திருப்பிக்கொடுத்து முழு பணத்தையும் பெற்றுக்கொள்ளும்படி இக்கியா நேற்று அறிக்கை ஒன்றில் கேட்டுக்கொண்டது.

மேல் துண்டை வாங்கியதற்கான ரசீது இல்லை என்றாலும் வாடிக்கையாளர் அவற்றைத் திருப்பித் தந்து வேறு பொருட்களை அல்லது பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

தான் விற்கும் பொருட்கள் பாதுகாப்பானவை என்பதை உறுதிப்படுத்துவது தனது தலையாய பணி என்றும் சுவீடன் நாட்டின் சில்லறை வர்த்தக நிறுவனமான இக்கியா தெரிவித்தது.