போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 24 பேர் கைது

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 24 பேர் கைது

1 mins read
94ed209a-b31c-4133-8d48-ed5ce7e2b250
-
Google News Preferred Icon

போதைப் பொருள் குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 24 பேரை மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு கடந்த செவ்வாய்க்கிழமையன்று கைது செய்தது. அவர்களிடமிருந்து 'மஷ்ரூம்' என்று அழைக்கப்படும் 1.9 கிலோ கிராம் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.

கேலாங் லோரோங் 10, கேசியா கிரசெண்ட், அங் மோ கியோ அவென்யூ 1, ஓடியன் காத்தோங் ஆகிய பகுதிகளில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் கேலாங்கில் மட்டும் 19 பேர் கைதானார்கள் என்று கூறப்பட்டது.