வெளிநாட்டில் போதைப்பொருள் கடத்தல்; சிங்கப்பூரர் கைது

வெளிநாட்டில் போதைப்பொருள் கடத்தல்; சிங்கப்பூரர் கைது

1 mins read
849f0982-02c8-4aae-b6cc-3bba8ee4f619
-
Google News Preferred Icon

வியட்னாமுக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் சிங்கப்பூரைச் சேர்ந்த 39 வயது ஆடவர் போதைப்பொருள் கடத்திய சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறார். பத்து கிலோகிராம் எடை கொண்ட 'ஐஸ்' எனப்படும் போதைப்பொருளை அவர் கடத்திச் செல்ல உதவியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

சர் வெய் ஹாகனும் 36 வயது வியட்னாமியர் டுவோங் ஹுங் தாமும் வியட்னாமின் எல்லை காவற்படையால் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக வியட்னாம் செய்தி நிறுவனம் தெரிவித்தது. அவர்கள்வசம் இருந்த போதைப்பொருட்களின் மதிப்பு கிட்டத்தட்ட 3, 450 வெள்ளி எனக் கூறப்படுகிறது.

வியட்னாமிய சட்டத்தின்படி இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.