சாலையைக் கடந்துகொண்டிருந்த பெண்ணை மோதிய டாக்சி

சாலையைக் கடந்துகொண்டிருந்த பெண்ணை மோதிய டாக்சி

1 mins read
Google News Preferred Icon

ஞாயிற்றுக்கிழமை காலை நடந்த சம்பவத்தில் கிச்சனர் ரோட்டுக்கும் ஜாலான் புசாருக்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண்மீது 'கம்ஃபர்ட்டெல்குரோ' நிறுவனத்தின் டாக்சி ஒன்று மோதியது. விபத்து நடந்தபோது போக்குவரத்து விளக்கு அந்தப் பெண்ணுக்குச் சாதகமாகப் பச்சை நிறத்தில் மின்னிக்கொண்டிருந்தது. அவர் சாலையைக் கடக்கும் போது டாக்சி அவர்மீது மோதியது. மோதப்பட்ட பெண் பாதசாரி மருத்துவமனைக்குச் செல்ல மறுத்ததாக போலிசார் தெரிவித்தனர். அவருக்கு ஏற்பட்ட காயங்கள் கடுமையாக இல்லை என்று நம்பப்படுகிறது. போலிஸ் விசாரணைக்கு 'கம்ஃபர்ட்டெல்குரோ' உதவி செய்து வருவதாக நிறு வனத்தின் அதிகாரி டேமி டான் தெரிவித்தார்.