சட்டத்துக்கு புறம்பாக வாணவெடிகளை வெடித்த ஆடவருக்கு சிறை, அபராதம்

சட்டத்துக்கு புறம்பாக வாணவெடிகளை வெடித்த ஆடவருக்கு சிறை, அபராதம்

2 mins read
Google News Preferred Icon

ஈசூனில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சட்டத்துக்குப் புறம்பாக வாணவெடிகளை வெடித்த ரசா யன ஆய்வாளர் ஒருவர், விசார ணையின்போது போலிஸ் அதி காரியிடம் பொய்யுரைத்தார். மேலும் அவர் மற்றோர் ஆடவரை யும் தனது குற்றத்தில் சம்பந்தப் படுத்த முயன்றார். இந்தக் குற்றங்களுக்காக 29 வயது ஜீவன் அர்ஜுனுக்கு (படம்) நேற்று மூன்று வாரச் சிறை, $5,000 அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த நவம்பரில் லிட்டில் இந்தியாவில் இருந்த தீபாவளிச் சந்தையில் அடையாளம் தெரியாத ஒரு விற்பனையாளரிடமிருந்து ஜீவன் பலவிதமான வாணவெடி களை வாங்கினார். பின்னர் அவர் ஈசூன் ஸ்திரீட் 51, புளோக் 513Aக்கு அருகில் இருந்த விளையாட்டு மைதானத் துக்குச் சென்றார். பிறகு நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி தினத்தன்று அதிகாலை 3.30 மணிக்கு வாணவெடிகளை அருகில் உள்ள திறந்தவெளி திட லுக்கு எடுத்துச் சென்று அங்கு அவற்றை வெடித்தார். அந்த ஐந்து நிமிட வாண வேடிக்கையால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. எந்தச் சொத்துக் கும் சேதம் ஏற்படவில்லை என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது. வாணவேடிக்கை பற்றி போலி சுக்கு குடியிருப்பாளர் ஒருவர் தக வல் கொடுத்தார். அதற்கு அடுத்த நாளே ஜீவன் அங் மோ கியோ போலிஸ் நிலையத்தில் விசார ணைக்கு அழைக்கப்பட்டார். அப்போது அங்குள்ள அதி காரியிடம், 32 வயது மாதவன் மைக்கல் டக்லஸ் என்பவர்தான் அந்த வாணவெடிகளை வாங்கி வந்தார் என்று ஜீவன் பொய் கூறினார். தமது செயல் பற்றி மாதவன் தான் போலிசுக்குத் தகவல் கொடுத்தார் என்று தாம் நம்பிய தால் அவரை பழிதீர்த்துக்கொள் ளத்தான்தான் அவ்வாறு பொய்யு ரைத்ததாக ஜீவன் தெரிவித்தார். வாணவெடிகளைத் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லா மல் வெடிக்கச் செய்வது கடுமை யான காயங்களை ஏற்படுத்தக் கூடியது என்றும் அவை தீச் சம் பவங்களுக்கும் காரணமாக அமை யலாம் என்றும் மாவட்ட நீதிபதி மார்வின் பே நேற்று வலியுறுத்தி னார். சட்டத்துக்குப் புறம்பாக வாண வெடிகளை வெடித்த செயலை ஒப்புக்கொண்டவர்களில் ஜீவன் மூன்றாமவர்.