எதிர்வரும் மார்ச் பள்ளி விடுமுறை காலத்தில் மலேசியாவிற்குச் செல்ல விரும்புவோர் நிலச் சோதனைச்சாவடிகளில் நெரிசலை எதிர்நோக்கலாம் என்று குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் கூறியுள்ளது.
மார்ச் மாதம் 15 முதல் 24 வரை பள்ளி விடுமுறை காலம்.
மார்ச் 15 முதல் 17 வரையிலும் 22 முதல் 24 வரையிலும் அதிகப்படியான நெரிசல் இருக்கும் என்று ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால் பயணத் திட்டங்களைச் சரிவர வகுத்துக்கொள்ளவேண்டும் என்று ஆணையம் கூறியது.

