குதிரை நடவடிக்கைகளை ஏற்கும் சிங்கப்பூர் பூல்ஸ்

குதிரை நடவடிக்கைகளை ஏற்கும் சிங்கப்பூர் பூல்ஸ்

1 mins read
Google News Preferred Icon

சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனம், அடுத்த ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி முதல் குதிரைப் பந்தய நடைமுறைகள் அனைத்தையும் சிங்கப்பூர் டர்ஃப் கிளப் நிறுவனத்திடமிருந்து எடுத்துக் கொள்ளும். பந்தயப் பிடிப்புக் கழக குழுமம் நேற்று இதனை அறிவித்தது. இந்தக் குழுமத்தின் பந்தயப் பிடிப்புக் கழகமும் அதற்கு முற்றிலும் சொந்தமான சிங்கப்பூர் டர்ஃப் கிளப், சிங்கப்பூர் பூல்ஸ் ஆகிய நிறுவனங்களும் உள்ள டங்கும். இந்தக் குழுமத்திற்குள் தொழில் நடைமுறைகளைக் காலக்கிரம முறைப்படி மறு பரிசீலனை செய்யும் நடவடிக்கையின் ஓர் அங்கமாக இந்த மாற்றம் இடம்பெறுகிறது.

அன்றாட குதிரைப் பந்தய செயல்பாடுகளும் கிராஞ்சியில் உள்ள டர்ஃப் கிளப்பும் தொடர்ந்து சிங்கப்பூர் டர்ஃப் கிளப்பின் நிர்வாகத் தின்கீழ் இருக்கும். பந்தய நடவடிக்கைகளை மட்டும் சிங்கப்பூர் பூல்ஸ் நடத்தும். சிங்கப்பூர் ரேஸ் கோர்சுக்கு உள்ளும் வெளி யிலும் உள்ள சிங்கப்பூர் பந்தய இடங்களை இனி சிங்கப்பூர் பூல்ஸ் நிர்வகிக்கும். 1842ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சிங்கப்பூர் டர்ஃப் கிளப், சிங்கப்பூரின் ஒரே குதிரைப்பந்தய மையமாக செயல் படுகிறது.