கிழக்கு- மேற்கு தடம் புது முறைக்கு மாற்றம்

கிழக்கு- மேற்கு தடம் புது முறைக்கு மாற்றம்

1 mins read
Google News Preferred Icon

கிழக்கு-மேற்கு ரயில் வழித்தடம், புதிய சமிக்ஞை முறைக்கு மாறி இருக்கிறது. நேற்றுக் காலை மழை பெய்த போதும் எல்லாம் சுமுகமாக நடந்ததாகத் தெரிகிறது. சிங்கப்பூரில் தொடர்பு அடிப் படையிலான ரயில் கட்டுப்பாட்டு சமிக்ஞை முறைக்கு மாறி இருக் கும் பழைய ரயில் வழித்தடங்களில் கிழக்கு=மேற்கு வழித்தடம் இரண் டாவதாகும். வடக்கு=தெற்கு ரயில் வழித்தடம் சென்ற ஆண்டில் இந்தப் புதிய முறைக்கு மாறியது. புதிய முறைக்கு மாறியதில் வடக்கு=தெற்கு ரயில் வழித்தடத் துடன் ஒப்பிடும்போது, கிழக்கு= மேற்கு தடத்தில் அவ்வளவாகப் பிரச்சினை இல்லை.

புதிய சமிக்ஞை முறை காரணமாக, துவாஸ் வெஸ்ட் நீட்டிப்புத் தடத்திலிருந்தும் நீட்டிப்புத் தடத்துக்கும் ரயில் சேவைகள் மறுபடியும் தொடங்கி உள்ளன. 2018-05-29 06:00:00 +0800

மேலும்