தானா மேராவில் அஸ்தி கரைக்கும் சடங்கு

தானா மேராவில் அஸ்தி கரைக்கும் சடங்கு

1 mins read
6620cdb0-f443-4372-afc2-267e5d38f03c
-
Google News Preferred Icon

அன்புக்குரியவர்களின் அஸ்தி யைக் கடலில் கரைக்க ஏதுவாக புதிய வசதி ஒன்றைக் கட்டித் தர தேசிய சுற்றுப்புற வாரியம் திட்டமிட் டிருப்பது தொடர்பான செய்தி கடந்த மாதம் வெளியானதைத் தொடர்ந்து கடல்நீர் விளையாட்டு சமூகத்தினரிடமிருந்து எதிர்ப்பு வலுவடைந்து வருகிறது. சாங்கி கோஸ்ட் வாக்கில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் கடல்நீர் விளையாட்டு மையம் உள் ளிட்ட பொழுதுபோக்கு நடவ டிக்கை மையங்களுக்கு அருகே இந்த வசதியைக் கட்ட திட்ட மிட்டிருப்பதே அவர்களின் வருத் தத்திற்கு காரணம்.

இந்த விவகாரம் குறித்து தேசிய சுற்றுப்புற வாரியம் அளித்த பதில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளித ழின் வாசகர் கடிதப் பக்கத்தில் நேற்று இடம்பெற்றது. அதில் பட கோட்ட சமூகத்தை ஈடுபடுத்துவ தில் தாம் நாட்டம் கொண்டிருப்பதை அது உறுதிப்படுத்தியது. தானா மேரா கரையோரப் பகு தியை இந்தப் புதிய வசதிக்கான இடமாக திட்டமிடப்பட்டிருப்பதை வாரியம் மறுப்பரிசீலனை செய்யு மாறு ஒருவர் இணையத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

தானா மேரா படகு முனையத்துக்கு அருகில் அஸ்தி கரைக்க ஒதுக்கப்பட்டுள்ள உத்தேச இடம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்