தென்கிழக்கு ஆசியா-வடக்கு ஆசியா கம்பிவட இணைப்பு: சிங்டெல் உடன்பாடு

தென்கிழக்கு ஆசியா-வடக்கு ஆசியா கம்பிவட இணைப்பு: சிங்டெல் உடன்பாடு

1 mins read
1a51a573-e68c-4547-bd29-d7d4b61c995e
-
Google News Preferred Icon

தென்கிழக்கு ஆசியாவையும் வடக்கு ஆசியாவையும் இணைக் கும் கடலடி கம்பிவடத்தை அமைப் பதற்கான உடன்பாட்டில் சிங்கப் பூரின் சிங்டெல் நிறுவனம் கையெ ழுத்திட்டு இருக்கிறது. உயர் செயல்திறன் கொண்ட அந்தக் கம்பிவடம், இந்த இரு வட்டாரங்களுக்கு இடையில் கூடுதல் இணைப்பை ஏற்படுத்தித் தரும் என்று சிங்டெல் அறிவித்தது. சிங்கப்பூர், தாய்லாந்து, கம்போ டியா, வியட்னாம், ஹாங்காங், தைவான், சீனா, தென்கொரியா, ஜப்பான் ஆகியவற்றை இணைக் கக்கூடிய கம்பிவடத்தைப் பதிப் பதற்கான உடன்பாட்டில் என்இசி கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் தென்கிழக்காசியா-ஜப்பான்2 கூட் டமைப்பு உறுப்பினர்கள் கை யெழுத்திட்டனர்.

அந்தப் புதிய கம்பிவடம், அதிநவீன தேவைகளை நிறைவேற் றும் என்று சிங்டெல் ஊடக அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது. அந்த 10,500 கி.மீ. கடலடி கம்பி வடம் இந்த வட்டாரத்தில் இருக் கும் 11 கம்பிவட நிலையங்களு டன் இணைப்புகளை ஏற்படுத்தும். இந்தப் பணி 2020ன் நான் காம் காலாண்டில் முடிவடையும் என்று தெரிகிறது.