பாதுகாவலரின் கழுத்தைப் பிடித்த ஆடவருக்கு $5,000 அபராதம்

பாதுகாவலரின் கழுத்தைப் பிடித்த ஆடவருக்கு $5,000 அபராதம்

1 mins read
Google News Preferred Icon

பெண் பாதுகாவலரின் கழுத்தைப் பிடித்து காயம் ஏற்படுத்திய தற்காக லாரி ஓட்டுநர் ஒருவருக்கு 5,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. சுந்தர் சந்திரசேகரன், 29, என்னும் அவர் கடந்த ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி அக்குற்றத்தைச் செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. நியூட்டனில் உள்ள 'ரெஸிடென்சஸ் அட் எவலைன்' என்னும் கூட்டுரிமை வீடுகளின் பாதுகாவலரான விஜயா ஸ்ரீராமுலு, 31, லாரி ஓட்டுநருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

கட்டடத்தின் அடித்தளப் பகுதி கார் நிறுத்தம் குடியிருப் பாளர்களுக்கு உரியது என்றும் அங்கே நிறுத்தினால் லாரி பூட்டப்படும் என்றும் 'இண்டர்காம்' வாயிலாக அவர் கூறி னார். ஆனால் அதனைப் புறக்கணித்த சுந்தர், அடித்தள கார் நிறுத்துமிடத்துக்குச் சென்று பொருட்களை இறக்கிய பின்னர் பாதுகாவலரைத் தேடினார்.

அப்போது கண்ணில்பட்ட விஜயா, "நல்லவேளை, உங்கள் லாரியைப் பூட்டவில்லை," என்றார். அதனைக் கேட்ட சுந்தர் திரும்பி வந்து விஜயாவின் கழுத்தைப் பிடித்ததாகவும் அதனைத் தொடர்ந்து அவருக்குத் தொண்டை அடைப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. விளைவுகளை அறியாது ஏதோ ஒரு வேகத்தில் தமது கட்சிக்காரர் அப்படி நடந்துகொண்டதால் சிறைத் தண் டனைக்குப் பதில் அபராதம் மட்டும் விதித்தால் போதும் என்று சுந்தரின் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். சுந்த ருக்கு ஈராண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப் படக்கூடும்.