தோல் வியாதியால் பாதிக்கப்பட்டோருக்கு காசநோய் தொற்றும் அபாயம் அதிகம்

தோல் வியாதியால் பாதிக்கப்பட்டோருக்கு காசநோய் தொற்றும் அபாயம் அதிகம்

1 mins read
a68ad160-db08-4cf0-9aa9-33c36da0ce06
-
Google News Preferred Icon

தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காசநோய் தொற்றும் அபாயம் அதிக அளவில் இருப்பதாக அண்மைய ஆய்வு ஒன்று கூறுகிறது. கடந்த 2004 முதல் 2011 வரை சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் 301,000 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 840 பேரில் 2% நோயாளிகள் தோல் வியாதியுடன் காசநோயும் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தோல் வியாதி இல்லாமல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளைவிட காசநோய் கண்டிருப்போர் 5 மடங்கு அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டது. தோல் வியாதி உள்ளவர்களுக்கு நீரிழிவு நோயும், ரத்த அழுத்தமும் அதிகமாக இருந்தால், அவர்களுக்குக் காசநோய் தொற்றும் அபாயம் 10 மடங்கு அதிகம். ஆனால், தற்சமயம் சிங்கப்பூரில் காசநோய் கண்டிருப்போரின் எண்ணிக்கை 0.035% முதல் 0.045% வரையில் இருப்பதாகக் கூறப்பட்டது.

840 பேரில் 2% நோயாளிகளுக்கு தோல் வியாதியுடன் காசநோயும் கண்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்