ஆனந்த்: சதுரங்க பயணம் தொடரும்

1 mins read
74b0f5bd-426e-4507-9a36-d45507efae9b
-

ப. பாலசுப்பிரமணியம்

ஒரு நாள் உலக சதுரங்க வெற்றியாளர் ஆவேன் என்ற நம்பிக்கை இருந்தாலும் அதே நினைப்பிலேயே தாம் இருந்த தில்லை என்று கூறினார் ஐந்து முறை உலகச் சதுரங்க வெற்றி யாளரான விஸ்வநாதன் ஆனந்த், 47. 2007ஆம் ஆண்டிலிருந்து 2013 வரையில் உலகச் சதுரங்க மேடையைக் கலக்கிய இந்த இந்திய சதுரங்க விளையாட் டாளரை யாரும் மறந்திருக்க முடியாது. சதுரங்க விளையாட்டை சிங்கப்பூர் பள்ளிகளில் பரப்பும் முயற்சியில் நேற்று சிங்கப்பூர் வந்திருந்த ஆனந்தை தமிழ் முரசு சந்தித்தது. 16 வயதுக்குக் கீழ்ப்பட்ட 50 மாணவர்கள் ஆனந்துடன் சதுரங்க ஆட்டங்களில் ஓரே நேரத்தில் போட்டியிட, 'ஓவர்சீஸ் ஃபேமிலி' பள்ளி நேற்று தன் வளாகத்தில் ஏற்பாடு செய்து இருந்தது. பெற்றோர்கள் உட்பட 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சிக்கு சிங்கப்பூர் சதுரங்கச் சம்மேளனம் ஆதரவு தந்தது.

'ஓவர்சீஸ் ஃபேமிலி' பள்ளி ஏற்பாடு செய்திருந்த சிறுவர், இளையர்களுக்கான சதுரங்கப் போட்டியில் கலந்துகொண்ட இந்திய சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்த். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்