மனநலத்தை மதிப்பிட நாடு தழுவிய ஆய்வு

மனநலத்தை மதிப்பிட நாடு தழுவிய ஆய்வு

1 mins read
Google News Preferred Icon

சிங்கப்பூரில் பெரியவர்களிடையே மனநலத்தை மதிப்பிடுவதற்காக நாடு தழுவிய ஆய்வு மேற் கொள்ளப்படவிருக்கிறது. இந்த ஆய்வு அடுத்த ஆண்டில் தொடங்கும். மனநலக் கழகம் நடத்தும் ஆய்வில் பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட 6,000 பேர் பங்கேற்க விருக்கின்றனர். இதையொட்டி வீடுகளில் நேர்காணல் நடத்தப்படும். மனநலத்தைப் பாதிக்கக்கூடிய அம்சங்கள், சிங்கப்பூரில் மனநல சிகிச்சைகளுக்கு உள்ள இடை யூறுகள், மனநலத்தில் சமூகம், கலாசாரம், பொருளியல் போன்ற வை ஏற்படுத்தும் விளைவுகள் உள்ளிட்டவை ஆய்வில் மதிப்பிடப் படும். மனநலப் பிரச்சினைக்கு எப்படி மக்கள் உதவியை நாடு கிறார்கள் என்பதும் ஆய்வில் கண்டறியப்படும். 'சிங்கப்பூர் மனநல ஆரோக்கிய ஆய்வு 2016' இரண்டாவது முறையாக மேற் கொள்ளப்படுகிறது. இதற்கு முன்பு 2010ல் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.