இந்தோனீசியப் பணிப்பெண் ணான 25 வயது முர்னி பனெங்சி தனது விரக்தியை முதலாளியின் நோய்வாய்ப்பட்ட தாயாரிடம் காட்டி அவர் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தியுள்ளார். இந்தக் குற்றத்திற்காக முர்னிக்கு 10 மாத சிறைத் தண் டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம். லெவண்டர் வட்டாரத்தில் உள்ள ஒரு வீட்டில் முர்னி தமது முதலாளியின் தாயாரைத் தாக்கிய 15 குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டார். அவரது முதலாளியின் தாயாருக்கு வயது 96. அத்துடன், அந்த மூதாட்டிக்கு சிறுநீரக பாதிப்பு, நீரிழிவு நோய் போன்றவற்றுடன் மறதி நோயும் இருந்ததாக நீதிமன்றத்தில் தெரி விக்கப்பட்டது.
அந்த மூதாட்டியைக் கவனித்துக்கொள்வதற்காக கடந்த 2013ஆம் ஆண்டு அந்தப் பணிப்பெண் பணியில் அமர்த்தப் பட்டதாக அரசாங்க வழக்கறிஞர் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித் தார். பணிப்பெண் தமது முதலாளி யின் தாயாரைப் பலமுறை தாக்கியுள்ளது கடந்த ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி மூதாட்டியின் மகள் அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த உள் கட்டமைப்பு புகைப்படக் கருவியின் வழி தெரியவந்தது. பின்னர், இது தொடர்பாக பணிப்பெண்ணை விசாரித்த மூதாட்டியின் மகள், அவர் பல முறை தமது தாயாரைத் தாக்கி யதை அறிந்தார். அதைத் தொடர்ந்து பணிப் பெண் மீது போலிசில் அவர் புகார் செய்தார். அந்தப் பணிப்பெண் மூதாட் டியை தாக்குவது தொடர்பாக முதன்முதலில் 2014ஆம் ஆண்டு கண்டிக்கப்பட்டார். அப்பொழுது இதுபோல் இனி செய்யமாட்டேன் என்று அந்தப் பணிப்பெண் உறுதி அளித்தார்.

