$1.99 பில்லியனுக்கு ஒரே கூரையின் கீழ் நான்கு பணிமனைகள் கட்டும் கொரியநிறுவனம்

$1.99 பில்லியனுக்கு ஒரே கூரையின் கீழ் நான்கு பணிமனைகள் கட்டும் கொரியநிறுவனம்

1 mins read
0a922bfc-fb04-442d-acfd-d0a4cc5f922e
-
Google News Preferred Icon

ஒரே கூரையின் கீழ் நான்கு பணிமனைகளைக் கட்டுவதற்கான ஒப்பந்தம் கொரியாவின் ஜிஎஸ் இஞ்சினியரிங் அண்ட் கன்ஸ் டிரக்ஷன் கார்ப்பரேஷன் நிறுவ னத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது. ஏறத்தாழ 1.99 பில்லியன் வெள்ளிக்கு இந்தப் பணிகள் செய்து முடிக்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவித்தது. புதிதாகக் கட்டப்படும் ஈஸ்ட் கோஸ்ட் ஒருங்கிணைப்புப் பணி மனையில் மூன்று ரயில் பணிமனைகளும் ஒரு பேருந்து பணிமனையும் அடங்கும். 36 ஹேக்ட்டர் நிலப்பரப்பில் இந்தப் பணிமனை கட்டப்படும். பணி மனையில் 220 ரயில்களும் 550 பேருந்துகளும் ஒரே நேரத்தில் நிறுத்தி வைக்கப்படலாம்.

இம்மாதிரியான பணிமனை கட்டப்படுவது உலகிலேயே இதுதான் முதல்முறை என்று தெவிக்கப்பட்டது. இதற்கு முன்பு டௌன்டவுன் 2 ரயில் தடத்தின் 'காலி பத்து' பணிமனையின் கட்டுமானத்திலும் ஜிஎஸ் இஞ்சினியரிங் நிறுவனம் ஈடுபட்டிருந்தது.

'காலி பத்து' பணிமனையை (படம்) கட்டிய ஜிஎஸ் இஞ்சினியரிங் நிறுவனத்துக்கு ஒரே கூரையின் கீழ் நான்கு பணிமனைகளைக் கட்டும் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்