எஸ்எம்ஆர்டி ஊழியர்கள் அதிகரிப்பு, மேம்பாடு

எஸ்எம்ஆர்டி ஊழியர்கள் அதிகரிப்பு, மேம்பாடு

1 mins read
bf03b216-d3e7-4ab1-9cda-bde66a084176
-
Google News Preferred Icon

தனது ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஊழியர் களின் திறனை மேம்படுத்தவும் இவ்வாண்டு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக எஸ்எம் ஆர்டி நிறுவனமும் தேசிய போக்குவரத்து ஊழியர்கள் சங்கமும் நேற்று தெரிவித்தன. பேருந்து ஓட்டுநர்களின் சம்ப ளத்தை உயர்த்த எஸ்எம்ஆர்டி திட்டமிட்டுள்ளது. கூடுதலாக 700 ரயில் ஊழியர்கள், 500 பேருந்து ஊழியர்களை நியமிக்க இருக்கிறது. ஊழியர்களுக்கான சுகாதாரச் சலுகைகள் மட்டுமின்றி பணியில் சேருவோருக்கு ஊக்கத் தொகையாக 3,000 வெள்ளி போனசும் பயிற்சிகளும் அளிக்கப்படும். பேருந்து ஓட்டும் பெண் ஓட்டுநர்களுக்கு 26 வார மகப்பேறு விடுப்பும் அனைத்து ஓட்டுநர்களுக்கும் பேருந்து, ரயில்களில் இலவசமாகப் பயணம் செய்யும் சலுகையும் கிடைக்கும்.