என்­டி­யுசி எண்­டர்­பிரைஸ் நிறுவனத்திலிருந்து பதவி விலகும் நாடாளுமன்ற நாயகர் சியா கியன் பெங்

என்­டி­யுசி எண்­டர்­பிரைஸ் நிறுவனத்திலிருந்து பதவி விலகும் நாடாளுமன்ற நாயகர் சியா கியன் பெங்

1 mins read
e05f097f-b503-4692-95a7-b5af085963ff
நாடாளுமன்ற நாயகர் சியா கியன் பெங்கிற்கு (இடது) பதிலாக, என்­டி­யுசி எண்­டர்­பிரைஸின் குழுமத் தலைமை நிர்வாக அதிகாரியாக எடலின் சம் பொறுப்பேற்பார். - படம்: என்­டி­யுசி எண்­டர்­பிரைஸ் 
Google News Preferred Icon

நாடாளுமன்ற நாயகர் சியா கியன் பெங் என்­டி­யுசி எண்­டர்­பிரைஸ் குழுமத் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பிலிருந்து விலகவுள்ளார்.

அவர் அதன் சமூகத் தொழில் நிறுவனங்களின் நிர்வாகக் குழுக்களில் இருந்தும் பதவி விலகவிருக்கிறார்.

ஆகஸ்ட் 2ஆம் தேதி நாடாளுமன்ற நாயகராகப் பொறுப்பேற்ற திரு சியா புதிய பொறுப்பில் முழுக் கவனம் செலுத்தவும் கடப்பாட்டுடன் செயல்படவும் இது துணைபுரியும் என்று என்டியுசி எண்டர்பிரைஸ் செய்தி அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.

தற்போதைய துணைத் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் திருவாட்டி எடலின் சம், 55, வரும் அக்டோபர் முதல் தேதியிலிருந்து திரு சியாவுக்குப் பதிலாக என்டியுசி எண்டர்பிரைஸ் குழுமத் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்பார்.

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் என்டியுசி எண்டர்பிரைஸிலும் ஃபேர்பிரைஸ் குழுமத்திலும் சேவையாற்றிய திரு சியாவுக்கு என்டியுசி எண்டர்பிரைசின் தலைவர் திரு லிம் பூன் ஹெங் புகழாரம் சூட்டினார்.

குறிப்புச் சொற்கள்