புவாங்கோக் எம்ஆர்டி நிலையத்தில் மின்தேக்கியிலிருந்து வெளியான புகை

புவாங்கோக் எம்ஆர்டி நிலையத்தில் மின்தேக்கியிலிருந்து வெளியான புகை

1 mins read
7ab97fc1-25bd-4703-a47f-8ea00b5b7475
சம்பவம் புதன்கிழமை மாலை 5 மணியளவில் நிகழ்ந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்
Google News Preferred Icon

புவாங்கோக் எம்ஆர்டி நிலையத்தில் புதன்கிழமை (ஜூலை 29) பயணி ஒருவரின் பையில் இருந்த மின்தேக்கியிலிருந்து புகை வெளியானது.

இதனால், அந்நிலையத்தில் ஐந்து நிமிடங்களுக்கு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. இச்சம்பவம் மாலை 5 மணியளவில் ரயில் நிலையத்தின் தளமேடையில் நிகழ்ந்ததாக வடகிழக்கு ரயில் பாதையில் சேவைகளை நடத்தும் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது தெரிவித்தது.

சம்பவம் நிகழ்ந்தபோது பொதுப் போக்குவரத்துப் பாதுகாப்புத் தளபத்திய (டிரான்ஸ்காம்) அதிகாரி உரிய நடவடிக்கையில் இறங்கினார் என்று எஸ்பிஎஸ் டிரான்சிட் பேச்சாளர் கிரேஸ் வூ தெரிவித்தார்.

“பயணிகளுக்கு உதவ எங்கள் ஊழியர்களும் சம்பவ இடத்தில் இருந்தனர்,” என்றும் அவர் கூறினார். ஐந்து நிமிடங்களுக்குள் புவாங்கோக் நிலையத்தில் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

சம்பவம் குறித்து மாலை 5.30 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் கிடைத்தது. தளமேடையில் மின்தேக்கியிலிருந்து புகை கிளம்பியதாகவும் தங்கள் படையினர் சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன்பு டிரான்ஸ்காம் அதிகாரி ஒருவர் தீயணைப்பானைப் பயன்படுத்தியதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

குறிப்புச் சொற்கள்