ஆறு வயது சிறுமி இறந்த விபத்து: ஓட்டுநர் கைது

ஆறு வயது சிறுமி இறந்த விபத்து: ஓட்டுநர் கைது

1 mins read
c12b974c-a4de-4ed5-961b-b838413de7f8
விபத்தில் காயம் அடைந்த ஆறு வயது சிறுமியும் ஒரு பெண்ணும் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். - படம்: எஸ்ஜி ரோட் விஜிலாண்டே/ ஃபேஸ்புக்
Google News Preferred Icon

சைனாடவுனில் இம்மாதம் 6ஆம் தேதி நிகழ்ந்த விபத்தில் ஆறு வயது சிறுமி உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பில் 38 வயது பெண் ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிப்ரவரி 8ஆம் தேதி காவல்துறை தெரிவித்தது.

பிப்ரவரி 8ஆம் தேதியே அந்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாகவும் விசாரணை தொடர்வதாகவும் அது கூறியது. பெண் ஓட்டுநர் கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி சிறுமிக்கு மரணம் விளைவித்ததாக காவல்துறை நம்புகிறது.

சவுத் பிரிட்ஜ் சாலையில் நிகழ்ந்த விபத்தில் ஒரு பெண்ணும் அவரது ஆறு வயது குழந்தையும் காயமடைந்தனர்.

படுகாயம் அடைந்த சிறுமி பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

தாயும் மகளும் இந்தோனீசியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் என்று சீன நாளேடான லியான்ஹ சாவ்பாவ் தெரிவிக்கிறது.

பௌத்த ஆலயத்திற்கு அருகே உள்ள கார்ப்பேட்டையில் விபத்து நிகழ்ந்தது.

எஸ்ஜி ரோடு விஜிலான்டே ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட படங்களில் ஓட்டுநர் கார்ப் பேட்டையிலிருந்து காரை வெளியே திருப்பியபோது விபத்து ஏற்பட்டதாக தலைப்பிடப்பட்டிருந்தது.

ஒரு படத்தில் ஓர் ஆடவர் சிறுமியைத் தூக்கிக்கொண்டு செல்வது தெரிகிறது.

2025ல் ஜனவரி முதல் செப்டம்பர் வரை காயம், உயிரிழப்புகளை ஏற்படுத்திய விபத்துகள் 7.4 விழுக்காடு அதிகரித்து 5,765 எண்ணிக்கையைத் தொட்டது. இது, 2024ல் 5,368ஆக இருந்தது.

குறிப்புச் சொற்கள்