சிங்கப்பூரின் கப்பல் எரிபொருள் விற்பனை சரிவு

சிங்கப்பூரின் கப்பல் எரிபொருள் விற்பனை சரிவு

1 mins read
deae1bbb-5006-4afc-968a-58562ee87c78
கடந்த ஏப்ரல் மாதத்தில் எரிபொருள் விற்பனை 8.7 விழுக்காடு சரிந்து 4.4 மில்லியன் டன்னாகப் பதிவானது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பும் உலகின் மிகப்பெரிய மையமான சிங்கப்பூரில், கடந்த ஏப்ரல் மாதத்தில் எரிபொருள் விற்பனை 8.7 விழுக்காடு சரிந்து 4.4 மில்லியன் டன்னாகப் பதிவானது. அதேபோல், சிங்கப்பூருக்கு வந்த எண்ணெய்க் கப்பல்களின் எண்ணிக்கையும் அவற்றின் மொத்த கொள்ளளவும் மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் கணிசமாகக் குறைந்துள்ளன.

கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியதால் கச்சா எண்ணெய் விநியோகம் கிட்டத்தட்ட தடைபட்டுள்ளது. உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் 20 விழுக்காடு வழக்கமாக இந்தப் பாதை வழியாகவே நடைபெறும் நிலையில், இந்த முடக்கமே சிங்கப்பூரின் எரிபொருள் விற்பனை சரிவுக்கு முக்கியக் காரணமாகும்.

விநியோகத் தட்டுப்பாடு காரணமாக, போர் தொடங்கியதிலிருந்து சிங்கப்பூரில் விற்கப்படும் பல்வேறு வகையான கப்பல் எரிபொருள்களின் விலை இருமடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
கப்பல்எரிபொருள்விற்பனை