சிங்கப்பூர் ‘சிவா‌ஜி’ அசோகன் காலமானார்

சிங்கப்பூர் ‘சிவா‌ஜி’ அசோகன் காலமானார்

1 mins read
36010676-c062-4420-9aeb-edfa71b0117f
பிரபல உள்ளூர்க் கலைஞர் ‘சிவாஜி’ அசோகன். - படம்: ஃபேஸ்புக்
Google News Preferred Icon

பிரபல உள்ளூர்க் கலைஞரான சிங்கப்பூர் ‘சிவாஜி’ அசோகன் எனும் அசோகன் முனியாண்டி சனிக்கிழமையன்று (அக்டோபர் 12) காலமானார். அவருக்கு வயது 60.

‘சிவாஜி’ அசோகன், மறைந்த பிரபல நடிகர்கள் எம்ஜிஆர், எம்ஆர் ராதா போன்றவர்களைப் போல் நடிக்கக்கூடியவர். அதிகமாக திரு அசோகன், சிவாஜி கணேசனின் பாடல்களுக்கு அவரைப்போல பாவனை செய்தும் அவர் நடித்த படக் காட்சிகளை நடித்துக் காட்டியும் சிங்கப்பூர், மலேசியா உட்பட பல நாடுகளில் புகழ் பெற்றார். அதனால், ரசிகர்கள் இவரை ‘சிவாஜி’ அசோகன் என்று அழைத்தனர்.

சனிக்கிழமை மாலை பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட திரு அசோகன், மேடையில் மயங்கி விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பிறகு ‘சிவாஜி’ அசோகன் சிகிச்சை பலனின்றி காலமானார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்கலைஞர்சிகிச்சை